×

தேர்தல் விதிமுறை மீறல் நடிகை ஜெயபிரதாவை கைது செய்ய உத்தரவு

ராம்பூர்: தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் நடிகை ஜெயப்பிரதாவை கைது செய்து மார்ச் 6ம் தேதி ஆஜர்படுத்த உபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது அவர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கெமாரி மற்றும் ஸ்வார் காவல்நிலையங்களில் 2 வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு ராம்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நடிகை ஜெயப்பிரதா நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். 7 முறை ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும், போலீசாரால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை. மேலும் ஜெயபிரதா கைது செய்வதை தவிர்க்கிறார். அவருக்குத் தெரிந்த அனைத்து மொபைல் எண்களும் அணைக்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஷோபித் பன்சால் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து ஜெயபிரதாவை தலைமறைவாக அறிவித்தார். மேலும் ராம்பூர் காவல் கண்காணிப்பாளர், உடனடியாக டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து ஜெயப்பிரதாவை கைது செய்து, மார்ச் 6ம் தேதி அடுத்த விசாரணை வரும் போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

The post தேர்தல் விதிமுறை மீறல் நடிகை ஜெயபிரதாவை கைது செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jayapratha ,Rampur ,UP court ,Jayaprada ,Lok Sabha ,Uttar Pradesh ,
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி