×

மாநிலங்களவை தேர்தல்… கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்காத பாஜக எம்எல்ஏக்கள்: பாஜகவினர் அதிர்ச்சி!!

கர்நாடகா: கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் காங். வேட்பாளருக்கு பாஜக எம்.எல்.ஏ. வாக்களித்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என அக்கட்சி கூறி வந்த நிலையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. எஸ்.டி.சோமசேகர் காங்கிரசுக்கு வாக்களித்ததை பாஜக தலைமை கொறடாவான தோடண்ண கவுடா உறுதிப்படுத்தினார். இதை அடுத்து கட்சி மாறி வாக்களித்த சோமசேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக கொறடா அறிவித்துள்ளது. அண்மையில் தனது தொகுதிக்கு நிதி ஒதுக்க உறுதி தரும் எம்.பி.யை தேர்வு செய்ய ஆதரவு தருவேன் என சோமசேகர் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.

கூட்டணி கட்சிக்கு வாக்களிக்காத பாஜக எம்எல்ஏக்கள்

கர்நாடகாவில் 5 மாநிலங்களவை எம்.பி.களுக்கான தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 3 பேரும், பாஜக, ம.ஜ.த. சார்பில் தலா ஒருவரும் போட்டியிட்டனர். பாஜக எம்.எல்.ஏ. கட்சி மாறி வாக்களித்ததால் ம.ஜ.த. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசம், இமாச்சலில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தல்களிலும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். சோமசேகர் தவிர மேலும் சில பாஜக எம்எல்ஏக்களும் கூட்டணி கட்சியான ம.ஜ.த. வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி வெற்றி பெற பாஜக எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என்பதையே சோமசேகர் செயல் காட்டுகிறது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

The post மாநிலங்களவை தேர்தல்… கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்காத பாஜக எம்எல்ஏக்கள்: பாஜகவினர் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.

Tags : BJP MLAs ,BJP ,KARNATAKA ,M. L. A. ,L. A. Somasekar ,M. L. A. Akatsi ,Party ,
× RELATED கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி...