×

பலாத்கார வழக்கில் தலைமறைவான நிலையில் ரயிலில் இருந்து தப்பிக்க முயன்ற குற்றவாளியின் கால் முறிவு: ராஜஸ்தானில் பரபரப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பலாத்கார வழக்கில் தலைமறைவான குற்றவாளி ரயிலில்இருந்து தப்பிக்க முயன்ற ேபாது கால் முறிந்ததால் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த மாளவியா நகர் பகுதியில் அமைந்துள்ள ரயில் பாதையின் அருகே காயமடைந்த நிலையில் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போலீசார், காயமடைந்த நிலையில் கிடந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ரயிலில் அடிபட்டு ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டவரின் பெயர் ராஜேந்திர யாதவ் (33). அவர் கடந்த 24ம் தேதி பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அந்தப் பெண்ணையும், அவரது சகோதரரையும் கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவாக இருந்தார்.

போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, தனது தாடி, மீசையை மழித்துவிட்டு சுற்றித் திரிந்துள்ளார். இந்த நிலையில் ரயிலில் தப்பிச் செல்லும் போது கீழே விழுந்துள்ளார். அதனால் அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது சகோதரரும் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ராஜேந்திர யாதவுடன் இருந்த மகேஷ் மற்றும் ராகுல் குர்ஜார் ஆகியோரை ஏற்கனவே கைது செய்துள்ளோம். பாலியல் குற்றவாளி ராஜேந்திர யாதவிற்கு சிகிச்சை முடிந்ததும், அவர் கைது செய்யப்படுவார்’ என்று கூறினர்.

 

The post பலாத்கார வழக்கில் தலைமறைவான நிலையில் ரயிலில் இருந்து தப்பிக்க முயன்ற குற்றவாளியின் கால் முறிவு: ராஜஸ்தானில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Jaipur ,Malaviya Nagar, Jaipur, Rajasthan ,
× RELATED ராஜஸ்தான் வெப்ப அலை: 3 நாட்களில் 22 பேர் பலி