×

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவைச் சந்தித்து தமிழ்நாடு ஜாதிமறுப்பு இணையர்கள் நலச்சங்கத்தினர் மனு

சென்னை: கனிமொழி எம்.பி. தலைமையிலான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவைச் சந்தித்து தமிழ்நாடு ஜாதிமறுப்பு இணையர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர். அந்த மனுவில் ஜாதி ஆணவபடுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். சுயமரியாதை மற்றும் ஜாதிமறுப்பு திருமணங்களை பதிவு செய்ய பெற்றோர் சம்மதம் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் திருமணத்தை பதிவு செய்ய மறுக்கக்கூடாது என அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டத்தின் கீழ் வழங்கபடும் தொகையினை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கபட வேண்டும். இந்திய ஒன்றிய அரசு ‘அம்பேத்கர் பவுண்டேசன் கீழ் ஜாதிமறுப்பு இணையர்களுக்கு வழங்கும் 2.5 லட்சம் தொகையை அனைத்து ஜாதிமறுப்பு இணையர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஜாதிமறுப்பு இணையர்கள் நலச்சங்கத்தினர் கனிமொழி எம்.பி. தலைமையிலான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

The post திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவைச் சந்தித்து தமிழ்நாடு ஜாதிமறுப்பு இணையர்கள் நலச்சங்கத்தினர் மனு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Jatimaruppu Affiliates Welfare Association ,Dimuka Election Report Preparation Committee ,Chennai ,Kanimozhi M. B. ,Tamil Nadu Jatimarupu Associates ,Election Report Preparation Committee ,Dimukhin ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...