×

மீனவர்களுக்காக திமுக அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: மீனவர்களுக்காக திராவிட மாடல் அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் – கன மழை வெள்ளத்தால் படகு சேதம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்த சென்னை – செங்கல்பட்டு – திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு முதல்வரின் அறிவுறுத்தலின்படி மீன்வளத்துறை சார்பில் ரூ.12.88 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் உரையாற்றிய அவர்; மழை, வெள்ளம் சூழ்ந்த சமயத்தில் மீட்புப் பணிகளில் நமது அரசுக்கு பக்க பலமாக இருந்து உதவிய மீனவர்களின் துணிச்சல் போற்றுதலுக்குரியது, மீனவ நண்பர்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும். அரசு வழங்கிய நிவாரண உதவிகளின் மூலம், சேதமடைந்த விசைப்படகுகள், கட்டுமரங்கள், வள்ளங்கள், மீன்பிடி வலைகள், இயந்திரங்களை சரி செய்து மீண்டும் மீன்பிடி தொழிலை தொடர வாழ்த்துகிறேன்.

இந்தியாவிலேயே ஊட்டச்சத்து மிகுந்த மாநிலம் தமிழ்நாடு. ராமநாதபுரத்தில் கடந்தாண்டு மீனவர்களை மாநாட்டை நடத்தியது திராவிட மாடல் அரசு. மீனவர்களுக்காக திராவிட மாடல் அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் மீனவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.8000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மீனவர்களின் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்காக 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டுப் படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் டீசலுக்கான அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் தூதுவர்களாக செயல்படவேண்டும். புதுமைப் பெண் திட்டம் மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூலம் 1 கோடிக்கும் அதிகமான மகளிர் பயன்பெற்று வருகின்றனர். திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன இவ்வாறு கூறினார்.

The post மீனவர்களுக்காக திமுக அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK Government ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Dravidian ,government ,Mijam storm ,Chengalpattu ,Thiruvallur ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...