×

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!!

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியாவில் சில மாநிலங்களில் இன்னும் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் உள்ளது. இவர்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் கூட பலரும் நக்சலைட்டுகளாகவும், மாவோயிஸ்ட்டுகளால் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று 4 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் ஜங்லா காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக நக்சல் தடுப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சோட் துங்கிலி வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டனர். இதில் 4 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.அவர்களது உடல்களை மீட்ட பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்களுக்கும் மோதல் நடந்து வருகிறது.

 

The post சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Nugsalites ,Chhattisgarh ,Bijapur ,Raipur ,India ,Nuccellites ,Maoists ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் இன்று காலை 4 நக்சல்கள் சுட்டுக் கொலை