×

INLD தலைவர் நஃபே சிங் ரதீ சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: பாஜக எம்.எல்.ஏ. உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு; சிபிஐ-க்கு மாற்ற முடிவு..!!

அரியானா: அரியானாவில் இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர் நஃபே சிங் ரதீ கொலை வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ நரேஷ் கெளசிக் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. INLD தலைவரும், முன்னாள் அரியானா சட்டமன்ற உறுப்பினருமான நஃபே சிங் ரதீ கடந்த ஞாயிறு அன்று காரில் சென்று கொண்டிருந்தபோது சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நஃபே சிங் ரதீ கொலை குறித்து அரியானா காவல்துறை விசாரணை செய்து வரும் நிலையில் இந்த விவகாரம் மாநில சட்டமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. நஃபே சிங் ரதீ அரசியல் காரணங்களுக்காவே படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டிய எதிர்கட்சிகள் உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வலியுறுத்தினர்.

இந்நிலையில், படுகொலையின் போது உடனிருந்த நஃபே சிங்கின் மருமகன் ராகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. நரேஷ் கெளசிக் உள்ளிட்ட 12 பேர் மீது கொலை, குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நஃபே சிங் ரதீகொலை வழக்கு விரைவில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என அரியானா உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

The post INLD தலைவர் நஃபே சிங் ரதீ சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: பாஜக எம்.எல்.ஏ. உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு; சிபிஐ-க்கு மாற்ற முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : INLD ,Naffe Singh Rathi ,BJP ,L. A. ,CBI ,Ariana ,MLA ,Naresh Kelasik ,Indian National Lok Platform party ,Nafe Singh Rathi ,president ,Ariana Assemblyman ,MP L. A. ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...