×

ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

திருவனந்தபுரம்: ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், பிரதாப், கிருஷ்ணன் மற்றும் சவுகான் ஆகிய 4 பேரையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். அடுத்த ஆண்டு 4 வீரர்களும் ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ளனர். கேரளாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் 4 வீரர்களையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி; இன்று வரலாற்றில் முக்கிய நாள்…ககன்யான் திட்டத்தில் செல்லும் வீரர்கள் பெயரை அறிவித்துள்ளோம்.

இன்று இந்த விண்வெளி வீரர்களை அறிமுகம் செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். விண்வெளி வீரர்கள் 4 ஆண்டுகளாக கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். விண்வெளி வீரர்களின் கடுமையான பயிற்சியில் யோகாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. விண்வெளியில் 400 கி.மீ தூரத்திற்கு பயணம் செய்வார்கள். 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்தியர் விண்வெளிக்கு செல்ல உள்ளார். விண்வெளி வீரர்கள் 4 பேரும் முக்கியமான பிரபலங்களாகிவிட்டார்கள். விண்வெளி வீரர்களை யாரும் தொல்லை செய்ய வேண்டாம்… அவர்களது பணிக்கு இடையூறாகிவிடும். விண்வெளி வீரர்களின் கவனம் சிதறாமல் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

பாரதத்தின் பெருமையை நிலைநாட்ட பகலிரவு பாராமல் உழைத்து வருகிறீர்கள். உங்களின் பயிற்சியை தொடருங்கள்…நாட்டின் ஆசீர்வாதம் உங்களோடு இருக்கும். இந்தியாவின் வெற்றி வரலாறு எழுதப்படும் போது, உங்களின் பெயரும் எழுதப்படும். இந்தியா தனது இடத்தை விண்வெளி துறையில் நிலைநிறுத்தி கொண்டிருக்கிறது. இந்த முறை விண்கலம், ராக்கெட் அனைத்துமே நம்முடையது. ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளி துறை வளர்வதோடு, பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது இவ்வாறு கூறினார்.

The post ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Kaganyan ,Thiruvananthapuram ,Modi ,Prashant Nair ,Pratap ,Krishnan ,Chauhan ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...