×

அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி: பாமக, தேமுதிக, என இரு கட்சிகளும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்பதால் சிக்கல்

சென்னை: மக்களவை தேர்தலுக்கான அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என்று அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. மாநிலங்களவை எம்.பி. பதவி வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

34 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் அதிமுகவால் 1 எம்.பி. பதவியை மட்டுமே உறுதியாக பெற முடியும். கூட்டணியில் சேர்ந்தால் பாமகவின் 5 எம்எல்ஏக்களும் சேர்த்து அதிமுக கூட்டணியில் 67 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். பாமக, தேமுதிக என இரு கட்சிகளும் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் நிலை உள்ளது. மாநிலங்களவை எம்.பி. பதவி வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

தற்போது ஓ.பி.எஸ். உட்பட 4 எம்.எல்.ஏக்கள் தவிர்த்து அதிமுக எம்எல்ஏ-க்கள் பலம் 62-ஆக மட்டுமே உள்ளது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க முடியாது என அதிமுக திட்டவட்டமாக கூறி வருவதாக கூறப்படுகிறது.

The post அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி: பாமக, தேமுதிக, என இரு கட்சிகளும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்பதால் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Adimuthika ,Demutika ,Palamaka ,Chennai ,Atamuka-Demutika alliance ,Lok Sabha elections ,Adimuka — ,Demutika alliance ,Dinakaran ,Bhamaka ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண்...