×

பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக அளவில் வெறுப்புப் பேச்சு: வாஷிங்டன் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் குற்றச்சாட்டு!!

டெல்லி: பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் அதிகளவில் உள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்ட இந்தியா ஹெட் லேப் என்ற அமைப்பு கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்திய ஆய்வில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள், செயல்கள் 75% பாஜக ஆளும் மாநிலங்களில் நடப்பதாக தெரிய வந்துள்ளது. தலைநகர் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத், ஹலால் ஜிகாத், மக்கள் தொகை ஜிகாத் போன்ற குற்றச்சாட்டுகளை கூறி சதித்திட்டங்கள் உருவாக்கப்படுவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதங்களில் வெறுப்பு பேச்சுக்கள் உச்சக்கட்டத்தில் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட், கர்நாடக, குஜராத், சத்தீஸ்கர், பீகார் ஆகிய மாநிலங்கள் சிறுபான்மையினரின் வெறுப்பு பேச்சில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்கள் வெறுப்பு பேச்சு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் 78% நடைபெறுவதாகவும், வழிபாட்டு தளங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் இந்த மாநிலங்களிலேயே அதிகம் நடைபெறுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர். அதே சமயம் பாஜக ஆளும் மாநிலங்களை விட ஆளாத மாநிலங்களையே அதிக அளவு வெறுப்புணர்வுடன் பாஜக தலைவர்கள் பேசி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள ஆய்வறிக்கை பாஜக, ஆர்.எஸ். எஸ்., பஜ்ரங் தளம் ஆகியவை வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிவருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

The post பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக அளவில் வெறுப்புப் பேச்சு: வாஷிங்டன் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் குற்றச்சாட்டு!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Washington Institute ,Delhi ,India ,India Head Lab ,Washington, USA ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...