×

2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் தஞ்சாவூர் அருகே 500 ஆண்டு பழமையான மரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள் குழாய் அமைத்து நீர் பாய்ச்சும் இளைஞர்கள்

தஞ்சாவூர், பிப்.26: 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரத்தை கோயிலாக நினைத்து இரவு பகலாக கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். பட்டுக்கோட்டை அருகேயுள்ளது வெண்பாகோட்டை கிராமம். இந்த கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான உதிர வேங்கை மரம் உள்ளது. இந்த மரத்திற்கு இப்பெயர் வருவதற்கு காரணம் இந்த மரத்திலிருந்து இலை மற்றும் பட்டையிலிருந்து ரத்தம் போன்ற சிகப்பு நிற திரவம் வடியும். இதனாலேயே இந்த மரத்திற்கு உதிர வேங்கை என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த மரத்தின் பட்டை மற்றும் இலை மாதவிடாய் கோளாறுகள் மற்றும் உதிரப்போக்கு, குழந்தையின்மை ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் இந்த மரத்தை இந்த கிராமத்து மக்கள் தெய்வம் போல் பாதுகாத்து வருகின்றனர். இந்த மரத்தின் ஒரு இலையையோ அல்லது மரத்தில் உள்ள பட்டையையோ ஒருவரும் தொட்டுக் கூட பார்ப்பதில்லை. அந்நிய நபர்கள் இந்த மரத்தின் இலை மற்றும் பட்டையை எடுக்காமல் இருப்பதற்காக இந்த கிராமத்து இளைஞர்கள் இரவு பகலாக இந்த மரத்தை பாதுகாத்து வருகின்றனர். இந்த மரத்திலிருந்து தானாக விழும் இலை மற்றும் பட்டையை மட்டும் எடுத்து இப்பகுதி மக்கள் மருத்துவத்திற்கு உபயோகப்படுத்துகின்றனர்.

இது குறித்து இந்த கிராமத்து இளைஞர்கள் கூறியதாவது: இந்த மரம் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரமாகும் இந்த மரத்தை நாங்கள் மருந்துக்காக மட்டுமல்லாமல் ஒரு தெய்வத்தை போல பாதுகாத்து வருகிறோம். கோடைகாலங்களில் இந்த மரம் தண்ணீர் இல்லாமல் பட்டுப் போகாமல் இருப்பதற்காக இந்த மரத்திற்கென தனியாக பைப் லைன் அமைத்து தண்ணீர் ஊற்றுகிறோம். இந்தப் பணியை எங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கடமையாக நினைத்து செய்கிறோம். இந்த மரத்தை கிட்டத்தட்ட பல தலைமுறைகளாக எங்கள் கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர். எங்கள் கிராமத்தின் அடையாளமே இந்த மரம் தான் எனவே இந்த மரத்தை நாங்கள் இனி வரும் காலங்களிலும் பாதுகாப்போம் என்றனர்.

The post 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் தஞ்சாவூர் அருகே 500 ஆண்டு பழமையான மரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள் குழாய் அமைத்து நீர் பாய்ச்சும் இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Venbagottai ,Pattukottai ,
× RELATED டூவீலரில் வந்து ஆட்டை கடத்தும் கும்பல்