×

ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் முந்திரி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

தஞ்சாவூர், பிப்‌.26: ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் முந்திரி சாகுபடிக்கான நவீன உற்பத்தி மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் நாலுவேதபதி கிராமத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார்.

முந்திரி மற்றும் கொக்கோ மேம்பாட்டு இயக்குநரக நிதி உதவியுடன் நடைபெற்ற இப்பயிற்சியில் வேதாரண்யம் தோட்டக்கலை உதவி இயக்குநர் நீதிமாணிக்கம் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து முனைவர் மணிமாறன், பேராசிரியர் (பயிர் மரபியல்) ஆனந்தி, இணைப் பேராசிரியர் (பூச்சியல்) மற்றும் முனைவர்.ராஜரத்தினம், இணைப் பேராசிரியர் (உழவியல்) ஆகியோர் தொழில்நுட்ப உரை ஆற்றினர். முன்னாள் ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன் மற்றும் முன்னோடி விவசாயி வேதையன் ஆகியோர் முந்திரி சாகுபடியில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும், விஞ்ஞானிகளோடு விவசாயிகள் கலந்துரையாடி தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர். இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் விருத்தாசலம் 3 முந்திரி ஒட்டுக்கன்று வழங்கப்பட்டது. முனைவர் ஆனந்தி நன்றி கூறினார்.

The post ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் முந்திரி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Aduthurai Paddy Research Institute ,Thanjavur ,Aduthurai Tamil Nadu ,Rice Research Institute ,Nagapattinam District ,Vedaranyam District ,Naluvedhapathi Village ,
× RELATED மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை