×

நீடூர், மாப்படுகை பகுதியில் ₹32 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம்: மயிலாடுதுறையில் ₹114 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நிறைவு

மயிலாடுதுறை,பிப்.27: மயிலாடுதுறையில் விரைவில் திறப்பு விழா காண உள்ள புதிய மாவட்ட கலெக்டர்அலுவலகத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்திற்கு என புதிய கலெக்டர்அலுவலகம் மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் ₹114 கோடி திட்ட மதிப்பீட்டில் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தரைத்தளத்துடன் 7 மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் சென்று அனைத்து பணிகளும் முடிவடைந்த கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை பார்வையிட்டார். முடிவுற்ற பணிகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் மகாபாரதி மற்றும் எம்பி ராமலிங்கம், எம்எல்ஏ நிவேதா முருகன், நகர மன்ற தலைவர் செல்வராஜ், துறை அதிகாரிகளுடன் கட்டிடத்தை திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து கூட்டத்தில் கலெக்டர் அலுவலக திறப்பு விழா குறித்து கலந்தாேலாசிக்கப்பட்டது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற மார்ச் 4ம் தேதி கலெக்டர் அலுவலக திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இன்னும் தேதி உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

The post நீடூர், மாப்படுகை பகுதியில் ₹32 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம்: மயிலாடுதுறையில் ₹114 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நிறைவு appeared first on Dinakaran.

Tags : Nitur, Mapadugai ,Mayiladuthurai ,Environment ,Minister ,Meyyanathan ,38th district ,Tamil Nadu ,Neetur, Mapadukai ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...