×

பெயர் பலகை இல்லாத பாசன வாய்க்கால்கள் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி பெற்றோரை இழந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த வாலிபர் கரூரில் காதல் திருமணம்

கரூர், பிப்.27: கரூர் மகளிர் காவல் நிலைய வளாகத்தில் மணமகன் பெற்றோர் எதிர்ப்பை மீறி, தாய்-தந்தை இல்லாத கல்லூரி மாணவியை, பட்டதாரி வாலிபர் திருமணம் செய்து செய்து கொண்டார். கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் பவானி (19). இவர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ.வரலாற்று துறையில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த தனபால் (25) எம்.இ படித்து விட்டு அரசு தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்த இளைஞரை கடந்த 4 ஆண்டுகளாக பவானி காதலித்து வருகிறார். பவானியின் பெற்றோர் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர்.

இந்நிலையில் தாய், தந்தையை இழந்த பவானி பெரியப்பா பெரியசாமி மற்றும் உறவினர்கள் ஆதரவில் இருக்கிறார். இந்நிலையில் பவானி மற்றும் தனபால் ஆகிய இருவரும் காதலித்து வருவது தனபாலின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. பெற்றோர்கள் தனபாலின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் தனபால் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, உறவினர்களுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் அளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் கரூர் மாமன்ற உறுப்பினர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். பெற்றோரை இழந்து உறவினர்கள் ஆதரவில் வளர்ந்து வந்த பவானிக்கு கரூர் மாமன்ற உறுப்பினர் வசுமதி பிரபு படிப்பு உதவி அளித்து வந்த நிலையில். தற்போது திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் உள்ளிட்ட உதவிகள் செய்துள்ளார். இந்த செயலை அனைவரும் பாராட்டினர், இருப்பினும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய கடுமையாக உழைத்து இலக்கை அடைய வேண்டும் என்று காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

The post பெயர் பலகை இல்லாத பாசன வாய்க்கால்கள் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி பெற்றோரை இழந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த வாலிபர் கரூரில் காதல் திருமணம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Women ,Station ,Bhavani ,Somur ,Karur district ,Dandonimalai ,
× RELATED வீட்டிற்குள் புகுந்து திருடிய 3 பேரை 12...