×

அவதூறு வீடியோ மறு டிவிட் நான் தவறு செய்துவிட்டேன்: உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில்

புதுடெல்லி: அவதூறு வீடியோவை மறு டிவீட் செய்து தவறு செய்துவிட்டதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஜெர்மனியில் வசிக்கும் ரதி என்பவர் ‘பாஜ ஐடி செல் பார்ட்-2’ என்ற தலைப்பில் யூடியூப் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பரப்பு அவதூறு ஏற்படுத்தினார். இதன் உண்மை தன்மையை ஆராயாமல் அதை முதல்வர் கெஜ்ரிவால் மறு டிவிட் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜவை சேர்ந்த சாங்க்ரித்யாயன் என்பவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘ அவதூறு வீடியோவை ரீடிவீட் செய்து தவறு செய்துவிட்டதாக கெஜ்ரிவால் சார்பில் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை மார்ச் 11ம் தேதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.

அமலாக்கத்துறை சம்மன் 7வது முறையாக நிராகரிப்பு
டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பி சம்மனை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று 7வது முறையாக நிராகரித்தார். மேலும் விசாரணைக்கு ஆஜராக மறுப்பதாக அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே அமலாக்கத்துறை முன் ஆஜராவேன் என்று அவர் தெரிவித்தார். மேலும் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு நேற்று ஆம்ஆத்மி அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்றார்.

The post அவதூறு வீடியோ மறு டிவிட் நான் தவறு செய்துவிட்டேன்: உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில் appeared first on Dinakaran.

Tags : KEJRIWAL ,New Delhi ,Delhi ,Chief Minister ,Gejriwal ,Supreme Court ,Rati ,Germany ,YouTube ,
× RELATED ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் கெஜ்ரிவால் மனைவி பிரசாரம்