×

இரும்பு குடோனில் தீ விபத்து: வேன், பைக் எரிந்து நாசம்

புழல், பிப்.27: செங்குன்றம்-வடபெரும்பாக்கம் சாலை, சின்னத்தோப்பு பெருமாள் கோயில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு, பழைய, சேதமான கார், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களின் கழிவு மற்றும் இரும்பு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த குடோனில் திடீரென நேற்று முன்தினம் நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.

தகவலறிந்து செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர் பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வந்து 4 மணி நேரத்துக்கு மேல் போராடி, தீயை அணைத்தனர். அதற்குள் குடோனில் இருந்த பழைய பொருட்கள் மற்றும் இரும்பு பொருட்களுடன் சேர்ந்து லோடு ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மினி வேன் மற்றும் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. புகாரின் அடிப்படையில் செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்களின் நாசவேலையா என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இரும்பு குடோனில் தீ விபத்து: வேன், பைக் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : iron godown ,Puzhal ,Chinnathoppu Perumal ,Sengunram-Wadaperumbakkam road ,
× RELATED புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்