×

ரேஸ்கோர்ஸ் நிலத்தில் பூங்கா அமைக்க மக்களிடம் கருத்துக்கேட்க வேண்டும்: மாநகராட்சிக்கு பா.ஜனதா மாஜி கவுன்சிலர் கடிதம்

மும்பை: ரேஸ்கோர்ஸ் மறுமேம்பாட்டு திட்டத்தில் பூங்கா அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்த வேண்டுமென மாநகராட்சிக்கு பாஜ கட்சி மாஜி கவுன்சிலர் மகரந்த் நர்வேகர் கடிதம் எழுதியுள்ளார். மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் நிலத்தில், 320 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் மத்திய பூங்கா அமைக்க மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, ராயல் வெஸ்டர்ன் இந்தியா டர்ப் கிளப் உறுப்பினர்களிடம் மாநகராட்சி சார்பில் ஒப்புதல் கேட்கப்பட்டது. அதன்படி, கிளப்பில் உள்ள 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜ மாஜி கவுன்சிலர் மகரந்த் நர்வேகர், மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாகலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டு உள்ளதாவது: மகாலட்சுமி ரேஸ்கோர்ஸின் மறுமேம்பாட்டிற்கு ராயல் வெஸ்டர்ன் இந்தியா டர்ப் கிளப்பின் 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதல் போதாது. இந்த நிலம் மும்பை வாசிகளுக்குச் சொந்தமானது.

எனவே, மக்களின் கருத்து மிக முக்கியம். இதற்கென உயர் அதிகாரிகள் குழுவை அமைத்து, மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். இந்த கோரிக்கையை மாநகராட்சி செயல்படுத்தத் தவறினால், இந்த விவகாரம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் எடுத்துச் செல்லப்படும். அத்தகைய முக்கியமான மற்றும் மிகப்பெரிய நிலத்தை மறுவடிவமைப்பு மற்றும் மத்திய பூங்கா உருவாக்கம் ஆகியவற்றின் கீழ் விட்டுவிடுவோம். இந்த திறந்தவெளியைக் காப்பாற்ற கடுமையாக போராடுவோம், எனக் குறிப்பிட்டு உள்ளார்.

The post ரேஸ்கோர்ஸ் நிலத்தில் பூங்கா அமைக்க மக்களிடம் கருத்துக்கேட்க வேண்டும்: மாநகராட்சிக்கு பா.ஜனதா மாஜி கவுன்சிலர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Mumbai ,Makarand Narvekar ,Corporation ,Mahalakshmi Racecourse ,Dinakaran ,
× RELATED சூரத் தொகுதியில் சுயேச்சை...