×

தேனியில் எஸ்.எஸ். டூரிஸ்ட் ஹோம் திறப்பு விழா

தேனி: தேனி நகர் புதிய பஸ் நிலையம் அருகே பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள எஸ்.எஸ். டூரிஸ்ட் ஹோம் மற்றும் வக்கீல் செல்வக்குமாரின் எஸ்.எஸ். சட்ட அலுவலக திறப்பு விழா நடந்தது. முன்னாள் அணைப்பட்டி ஊராட்சி துணை தலைவர் சுருளிச்சாமி கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். எஸ்.எஸ். டூரிஸ்ட் ஹோமினை தேசிய செட்டியார்கள் பேரவை மாநில தலைவர் பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ராவும், எஸ்.எஸ். சட்ட அலுவலகத்தை மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியனும் திறந்து வைத்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களை வக்கீல் செல்வக்குமார் வரவேற்றார். விழாவில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ சரவணக்குமார், ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ மகாராஜன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எல்.மூக்கையா, ஆசையன், தேனி நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், தேனி நகர திமுக செயலாளர் நாராயண பாண்டியன், தேனி நகர்மன்ற துணை தலைவர் வக்கீல் செல்வம், தேனி வக்கீல் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன், தொழிலதிபர்கள் தேனி பிளைவுட் ராஜசேகர், கோவிந்தராஜ், முத்துகோவிந்தன் மற்றும் தேனி ராயல் அரிமா சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

The post தேனியில் எஸ்.எஸ். டூரிஸ்ட் ஹோம் திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : SS ,Theni ,S.S. ,Bypass Road ,Theni Nagar ,Selvakumar ,Former ,Dampatti ,panchayat ,vice president ,Surulichami ,
× RELATED மதுரை மாணவன் வழக்கில் திடீர்...