×

மானூர் அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு

மானூர்,பிப்.27: மானூர் அருகே பைக் மீது லாரி மோதியதில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மானூர் அருகேயுள்ள கானார்பட்டியைச் சேர்ந்தவர் விக்டர் (45). தச்சுத் தொழில் செய்துவருகிறார். இவரது மகன்கள் ஜேம்ஸ் ஜோஸ்வா (21), ஜான்பால் (20) ஆகிய இருவரும் கல்லூரி மற்றும் டிப்ளமோ முடித்துவிட்டு தனது தந்தைக்கு உதவியாக இருந்துவந்தனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையில் பங்கேற்ற பிறகு மாலை பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை ஜான்பால் ஓட்டினார். சங்கரன்கோவில் சாலையில் மானூர் அடுத்த ரஸ்தா அருகே வந்தபோது அங்கு வந்த லாரி, இவர்களது பைக் மீது மோதியது. இதி தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜேம்ஸ் ஜோஸ்வா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய லாரியை ஓட்டிவந்த டிரைவரான சங்கரன்கோயில் சங்குபுரத்தைச் சேர்ந்த முருகன் (58) மீது மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post மானூர் அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Manoor ,Victor ,Kanarpatti ,James Joshua ,Janpal ,
× RELATED சார் படத்தை வெளியிடும் ரோமியோ பிக்சர்ஸ்