காங்டாக்: உலக அளவில் மக்கள்தொகையில் 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.ஆனால், வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் மக்கள்தொகை குறைவாகவே உள்ளது.சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 6 லட்சத்து 10 ஆயிரம். இங்கு குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் சிறப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை சிக்கிம் அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
பெண் அரசு ஊழியர்கள் 2-வது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும். 3-வது குழந்தை பெற்றுக்கொண்டால் இரண்டு ஊதிய உயர்வு அளிக்கப்படும். பேறுகால விடுப்பாக பெண் அரசு ஊழியர்கள் 365 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். புதிதாக தந்தையாகும் ஆண்களுக்கு 30 நாள் விடுப்பு என பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக பிறக்கும் குழந்தைகளின் பெயரில் ₹10,800 ரூபாயை வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என்ற திட்டத்தை முதல்வர் பிரேம் சிங் தமாங் நேற்று அறிவித்தார். குழந்தை 18 வயதாகும் போது இந்த தொகையை எடுத்து கொள்ளலாம்.
The post புதிதாக பிறக்கும் குழந்தைகளின் பெயரில் ₹10,800 டெபாசிட் திட்டம்: சிக்கிம் முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.