×

பழநியில் ரூ.8 லட்சம் மதிப்பில் சாலை பணி துவக்கம்

பழநி, பிப். 27: பழநி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டில் சிமெண்ட் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இந்நிதியில் இருந்து சாலை பணி அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. வார்டு கவுன்சிலர் மகேஸ்வரி சக்திவேல் தலைமை வகித்தார். திமுக நகர செயலாளர் வேலுமணி முன்னிலை வகித்தார்.

நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பழநி டவுன் முஸ்லீம் தர்ம பரிபாலண சங்க செயலாளர் லியாகத்அலி, ஆஜியார் முகமது அலி, மாவட்ட மகளிரணி தொண்டரணி அமைப்பாளர் இந்திரா திருநாவுக்கரசு, திமுக மாவட்ட பிரதிநிதி அழகேசன், விமலபாண்டியன், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் முருகபாண்டியன், நகர துணை செயலாளர் பெரியமருது, கவுன்சிலர்கள் சுரேஷ், பாபு, முருகேஸ்வரி பாபு, வீரமணி, பிச்சைமுத்து மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post பழநியில் ரூ.8 லட்சம் மதிப்பில் சாலை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Palani ,IP ,Senthilkumar ,MLA ,Ward 21 ,Municipality ,Bhumi Pooja ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து