×

அரசின் சாதனைகளை வீடுகள் தோறும் சேர்க்க வேண்டும்

திருச்செங்கோடு: திராவிட மாடல் அரசின் சாதனைகளை வீடுகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024 2025ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையின் சிறப்பம்சங்களை வீடுகள்தோறும் கொண்டு சேர்க்கவும், ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை எடுத்துரைக்கும் வகையில், இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நடத்தப்படும் திண்ணைப் பிரசாரக் கூட்டத்தில், இல்லங்களில் உள்ள குடும்பத்தலைவிகளிடம், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் புதுமைப் பெண் திட்டம், பஸ்களில் மகளிர் இலவச பயணம், சிறார்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டம், இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்த கல்லூரி மாணவர்களுக்கான மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும், தமிழ் புதல்வன் திட்டம் என்று திராவிட மாடல் ஆட்சியின் சாதனை திட்டங்களை எடுத்துக் கூறிடவேண்டும். எனவே, இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாக முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் நாள்தோறும் நடைபெரும் திண்ணை பிரசார கூட்டங்களை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post அரசின் சாதனைகளை வீடுகள் தோறும் சேர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Dravidian model government ,DMK ,Namakkal West District ,Mathura Senthil ,Dravida model government ,
× RELATED இந்தியாவில் தமிழ்நாடுதான் தலை சிறந்த மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!