×

தக்காளி நாற்று நடவு பணி தீவிரம்

ராயக்கோட்டை: ராயக்கோட்டை பகுதியில் தக்காளி நாற்று நடவு பணியை விவசாயிகள் முடுக்கி விட்டுள்ளனர். ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மண்டிகளுக்கு, மார்ச் மாதம் முதல் தக்காளி வரத்து அதிகரிக்கும். பல்வேறு பகுதிகளில் தக்காளி சீசன் முடிவுக்கு வரும் நிலையில், ராயக்கோட்டை பகுதியில் விளைச்சலுக்கு வரும் என்பதால், வியாபாரிகள் இங்கு வந்து தக்காளியை மொத்தமாக வாங்கிச் செல்வர். இங்கிருந்து நாடு முழுவதும் தக்காளி சப்ளை செய்யப்படுகிறது. சீசனை எதிர் நோக்கி, ராயக்கோட்டையில் தற்போது தக்காளி சாகுபடி பணியை விவசாயிகள் முடுக்கி விட்டுள்ளனர். குறிப்பாக சொட்டு நீர் பாசனம் அமைத்து, தக்காளி நாற்று நடவு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். குறைந்த நீராதாரத்திலும் நாற்றுகள் செடியாகி பூ விட்டு காய் பிடித்து இரு மாதங்களில் அறுவடைக்கு வரும். அப்போது, மற்ற பகுதிகளில் தக்காளி சீசன் ஓய்ந்திருக்கும் நிலையில் சந்தையில் ராயக்கோட்டை தக்காளி விற்பனை களை கட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சமூக பொறுப்புணர்வு தேசிய மாநாடு

The post தக்காளி நாற்று நடவு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,
× RELATED பச்சை மிளகாய் சாகுபடி அதிகரிப்பு