×

டைடல் பார்க் வளாகத்தில் 2-ம்கட்ட நகர்ப்புற காடுகள் வளர்ப்பு திட்டம்

 

கோவை, பிப். 27: கோவை டைடல் பார்க் வளாகத்தில் இரண்டாம் கட்ட நகர்ப்புற காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று முன்தினம் நடந்தது. தமிழ்நாடு பசுமை இயக்கம் மற்றும் எச்டிஎப்சி பரிவர்த்தனை திட்டத்தின்கீழ் இந்நிகழ்ச்சி நடந்தது. எல்காட் நிர்வாக அதிகாரி தனலட்சுமி வரவேற்றார். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மரக்கன்றுகளை நட்டு, இத்திட்டத்தை துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் அஸ்வின்குமார், மணிஷ் வியாஸ், ரோஹிணி சர்மா, முர்துஜா ராஜா,

பவுக் பேய்ட், கவுசிக், ஹபிஸ்கான் உள்பட பலர் பங்கேற்றனர். இதே வளாகத்தில், முதல்கட்டமாக 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதுவரை, மொத்தம் ஒரு கோடி ரூபாய் செலவில் 45 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ரவுண்ட் டேபிள் ஆப் இன்டியா, ஹோம் ஆப் ஹோப் அமெரிக்கா அறக்கட்டளை, கோவை ரவுண்ட் டேபிள் ஸ்பார்க் 323, லேடீஸ் சர்க்கிள் ஆப் இன்டியா, கோவை ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி கிளப் ஆகிய அமைப்புகள் உதவியுடன் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

The post டைடல் பார்க் வளாகத்தில் 2-ம்கட்ட நகர்ப்புற காடுகள் வளர்ப்பு திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tidal Park ,Cowie ,Goi ,Tamil Nadu Green Movement ,Dinakaran ,
× RELATED டைடல் பார்க், தகவல் தொழில்நுட்பம்...