×

ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்: பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி மன்ற கூட்டம் அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் உ.வடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெ.மகாதேவன், செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் வி.விஜயலட்சுமி, அ.கஸ்தூரி, எஸ்.ஜீவா, எஸ்.அனிதா, மஞ்சுளா, ஆர்.ராஜேஷ், எஸ்.பிரியா, வீ.வேணுகோபால், டி.எம்.ரமேஷ், வி.ஜெயசுதா, ஆர்.பிரதீப், சி.வேலு, ஜெ.லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 2023-24ம் நிதியாண்டில் 15ம் நிதிக்குழு மானியம் மற்றும் பொது நிதியில் பல்வேறு பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 15ம் நிதிக்குழு நிபந்தனை மானியம் முதல் தவணை மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாக மேற்கு பகுதி சுற்றுச்சுவர் கட்ட ரூ.7 லட்சத்து 30 ஆயிரமும், அம்ருத் திட்டத்தின் கீழ் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி வளாகத்திற்கு சுற்றுச் சுவர் கட்ட ரூ.20 லட்சமும், குபேரன் கார்டன் சாலை பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.20 லட்சமும், ராஜேஸ்வரி நகர் பூங்காவை அபிவிருத்தி செய்ய ரூ.20 லட்சம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் பொது நிதி மூலம் மேற்கொள்ளவேண்டிய பணிகளுக்காக, வளமீட்பு பூங்கா வளாகத்தில் உலர் கழிவு கொட்டகை அணுகு சாலை அமைக்க ரூ.20 லட்சமும், வளமீட்டு பூங்கா வளாகத்தில் ஈரக்கழிவு கொட்டகை அணுகு சாலை அமைக்க ரூ.18 லட்சத்து 50 ஆயிரமும், பேரூராட்சிக்கு சொந்தமான மேட்டுத்தாங்கல் பகுதியில் காலி நிலத்தில் பாதுகாப்பு வேலி அமைத்திட ரூ.19 லட்சமும் என ரூ.1 கோடியே 88 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்: பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thiruvallur ,District ,Tirumazhisai Municipal Council ,Municipal President ,U. Vadivelu ,Vice President ,J. Mahadevan ,Executive Officer ,Venkatesan ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில்...