×

பாஜக மூத்த தலைவரும், நடிகையுமான ஹேமமாலினிக்கு மீண்டும் மதுரா கிடைக்குமா: கூட்டணி தலைவர் அடிபோடுவதால் சிக்கல்

மதுரா: கூட்டணி தலைவர் அடிபோடுவதால், பாஜக மூத்த தலைவரும், நடிகையுமான ஹேமமாலினிக்கு மீண்டும் மதுரா தொகுதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மதுரா மக்களவைத் தொகுதி எம்பியாக நடிகை ஹேமமாலினி இருந்து வருகிறார். இவர் மீண்டும் மதுரா தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த ஆர்எல்டி கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, மதுரா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். காரணம், கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதுரா தொகுதி எம்பியாக ஜெயந்த் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களில் பாஜக மூத்த தலைவரும் நடிகையுமான ஹேமமாலினி தொடர்ந்து வெற்றி பெற்றார். அதனால் மதுரா தொகுதியில் மீண்டும் ஹேமமாலினிக்கு ஒதுக்கப்படுமா? அல்லது கூட்டணி கட்சியான ஆர்எல்டிக்கு ஒதுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு அடுத்தப்படியாக மதுரா தொகுதியானது விஐபி தொகுதியாக பார்க்கப்படுவதால் உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், சமீபத்தில் மதுராவுக்கு வந்த ஹேமமாலினி, உள்ளூர் பாஜக தலைவர்கள் சந்தித்த போது, கட்சித் தலைமை உத்தரவிட்டால் மதுரா தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாஜக மூத்த தலைவரும், நடிகையுமான ஹேமமாலினிக்கு மீண்டும் மதுரா கிடைக்குமா: கூட்டணி தலைவர் அடிபோடுவதால் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Hema Malini ,Mathura ,Lok Sabha ,Uttar Pradesh ,
× RELATED பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது...