×

மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம், மணவாளநகரில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். ஒன்றிய, நகர செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், கந்தசாமி, ராமஞ்சேரி மாதவன், சக்திவேல், ஒன்றிய நிர்வாகிகள் சிற்றம் சீனிவாசன், பூபாலன், பாசுரான், பூங்காவனம் மணி, ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார், பட்டாபி, விஜயகாந்த், வசந்தகுமார், மில்டன் ஆகியோர் வரவேற்றனர். மாணவர் அணி மாநில செயலாளர் விஜயகுமார், செய்தி தொடர்பாளர் ஜெமிலா ஆகியோர் 500 பெண்களுக்கு சேலைகளை வழங்கி அதிமுகவின் சாதனைகளை விளக்கிப் பேசினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் இன்பநாதன், விஜயலட்சுமி ராமமூர்த்தி, சந்திரசேகர், நரேஷ்குமார், ராம்குமார், ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர், நேசன், எழிலரசன், வினோத்குமார் ஜெயின், பாலாஜி, தட்சிணாமூர்த்தி, சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : West District AIADMK ,Jayalalithaa ,Tiruvallur ,Chief Minister ,Kadambatur Union ,Manavalanagar ,district secretary ,minister ,PV Ramana ,Union ,City Secretaries ,Suragapuram Sudhakar ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...