×

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கழிவுநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: ரூ.92.76 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-191க்குட்பட்ட ஜல்லடியான்பேட்டை பகுதிக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் கழிவுநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது என்று சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் 24.02.2024 அன்று நெம்மேலியில் நடைபெற்ற 150 எம்.எல்.டி உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலைய தொடக்க விழாவில், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.92.76 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-191க்குட்பட்ட ஜல்லடியான்பேட்டை பகுதிக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் கழிவுநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

அதனடிப்படையில், இன்று (26.02.2024) ஜல்லடியான்பேட்டையில் 33.38 கி.மீ நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் மற்றும் 9.92 கி.மீ நீளத்திற்கு விசைக்குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முலம், 2 எண்ணிக்கையிலான கழிவுநீர் இறைக்கும் நிலையங்கள், 6 கழிவுநீர் உந்துநிலையங்கள், 6 இயந்திர நுழைவாயில் உந்து நிலையங்கள், 2 இடைமறிப்பு மற்றும் திசை திருப்புதலுக்கான உந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

மேலும், கழிவுநீர் கசடுகள், கழிவுநீர் வழிந்தோடல் ஏற்படாத வண்ணம் 1,361 எண்ணிக்கையிலான இயந்திர நுழைவாயில்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 2,844 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். இத்திட்டப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு 3,439 குடியிருப்புகளுக்கு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 23,700 பொதுமக்கள் பயன்பெறுவர்.

The post சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கழிவுநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது: சென்னை குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Choshinganallur ,Chennai Water Board ,CHENNAI ,Chennai Drinking Water Board ,Jalladianpet ,Choshinganallur Zone ,Tamil Nadu ,Chief Minister ,Nemmeli ,Chozhinganallur ,Dinakaran ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...