×

பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கை கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது: கே.எஸ்.அழகிரி!

சென்னை: பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கை கூட்டாச்சி தத்துவத்திற்கு இது ஏற்புடையது அல்ல என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநில அரசு. குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் என்ற பகுதியில் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக புதிய தடுப்பணை ஒன்றைக் கட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கை கூட்டாச்சி தத்துவத்திற்கு இது ஏற்புடையது அல்ல என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X தள பதிவில்; பாலாற்றின் குறுக்கே குப்பம் பகுதியில் 22வது தடுப்பணை அமைப்பதற்கு ஜெகன் மோகன் ரெட்டி அனுமதி அளித்து அதற்கு ரூ.215 கோடி நிதியும் அறிவித்து உள்ளார். கூட்டாச்சி தத்துவத்திற்கு இது ஏற்புடையது அல்ல. ஒரு நதி உருவாகும் இடமும் அது முடிவடைகிற இடமும் சம மதிப்புடையது ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

The post பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கை கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது: கே.எஸ்.அழகிரி! appeared first on Dinakaran.

Tags : Andhra state government ,KS ,CHENNAI ,Former ,president ,Tamil Nadu Congress Committee ,KS Aglagiri ,Supreme Court ,Karnataka ,K.S.Azhagiri ,
× RELATED விதை நேர்த்தி விழிப்புணர்வு