×

கீழடி அகழாய்வு: ஆய்வறிக்கையை 9மாதங்களில் வெளியிட ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை: கீழடியில் மேற்கொண்டுள்ள அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9மாதங்களில் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கீழடியில் நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வு குறித்த 982 பக்கம் உள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட மனுவில்; 9 மாதங்களில் கீழடியில் ஒன்றிய அரசு மேற்கொண்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிடவேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பிரபாகர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஒன்றிய அரசு சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். அகழாய்வின் போது 5000க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு 3ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை குறிப்பிட்டார். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணையில், கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் குறித்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட உத்தரவிட கோரிய மனு மீதான விசாரணையில், கீழடியில் மேற்கொண்டுள்ள அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9 மாதங்களில் ஒன்றிய அரசு வெளியிடவேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வரும்நிலையில் 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும் என மத்திய அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. 9 மாதங்களில் கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.

The post கீழடி அகழாய்வு: ஆய்வறிக்கையை 9மாதங்களில் வெளியிட ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : iCourt Branch ,EU government ,Madurai ,Madurai Branch ,High Court ,State of the Union ,AMARNATH RAMAKRISHNAN ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...