×

446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு

சென்னை: 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இன்றி பணியாற்றி வரும் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “பள்ளிக்கல்வி – பொது நூலக இயக்ககம் மாவட்ட நூலக ஆணைக்குழுக்களில் செயல்படும் ஊர்ப்புற நூலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இன்றி ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வரும், 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு தற்காலிக பணி விதிகளில் விதி 3 (பணி நியமன முறை) மற்றும் விதி 6 (இட ஒதுக்கீடு) ஆகிய விதிகளுக்கு தளர்வு செய்து மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

1. அரசாணை (நிலை) எண்.60. பள்ளிக் கல்வித் துறை. நாள் 27.04.2006.
2. பள்ளிக் கல்வி அமைச்சர் 04.10.2023 ஆம் நாளன்று வெளியிட்ட அறிவிப்பு.
3. பொது நூலக இயக்குநரின் ந.க.எண்.199/அ1/2021,

ஆணை: 1. மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் மூன்றாம் நிலை நூலகர் பணியிடத்திற்கான தற்காலிகப் பணிவிதிகளில், மூன்றாம் நிலை நூலகர் பணியிடத்திற்கான ஊட்டுப் பதவி பதிவறை எழுத்தர் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், பணி நியமன முறை குறித்து கீழ்கண்டவாறு ஆணையிடப்பட்டுள்ளது.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 04.10.2023 நாளிட்ட அறிவிப்பில் ஏனையவற்றுடன் வரிசை எண்.5-இல் பின்வருமாறு அறிவிப்பு செய்துள்ளார்கள். “தற்போது பொது நூலகத் துறையில் மூன்றாம் நிலை நூலகர்கள் பணியிடம் 2058 உள்ளது. இதில் 446 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஊப்புற நூலககள் 1530 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 446 நபர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கும் அரசாணையும் வெகு விரைவில் வெளியிடப்படும். இதற்காக அரசுக்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூபாய் 8.32 கோடி ஆகும்.”

3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட பொது நூலக இயக்குநரின் கடிதத்தில் பின்வரும் விவரங்களை தெரிவித்துள்ளார்.

i. மாவட்ட நூலக ஆணைக்குழுக்களில் இன்றைய நாள் நிலவரப்படி Level-8, ரூ.19,500 62,000 என்ற காலமுறை ஊதியம் கொண்ட 446 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2006ம் ஆண்டு முதல் மாவட்ட நூலக ஆணைக்குழுக்களின் கீழ் செயல்படும் கிளை நூலகங்களில் மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்கள் காலி ஏற்படும் போதும் மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும்போதும் அரசால் அவ்வப்போது உரிய விதித்தளர்வுகள் வழங்கப்பட்டு, ஊர்ப்புற நூலகர்கள் மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு வருவது போன்று, மாவட்ட நூலக ஆணைக்குழுக்களில் செயல்படும் 1,915 ஊர்ப்புற நூலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இன்றி Level-4, ரூ.7,700-24,200 என்ற சிறப்பு காலமுறை ஊதிய நிலையில் ஊதியம் பெற்று நூலகப் பணியாற்றி வரும் ஊர்ப்புற நூலகர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நூலக ஆணைக்குழுக்களில் இன்றைய நிலவரப்படி காலியாக உள்ள 446 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களை அரசால் விதித் தளர்வுகள் வழங்கி 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு Level-8, ரூ.19,500 62,000 στσότ காலமுறை ஊதிய விகிதம் கொண்ட மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

ii. மேலும், 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு Level-8, ரூ.19,500 62,000 என்ற காலமுறை விகிதம் ஊதியம் கொண்ட மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு வழங்கும் பட்சத்தில் பட்சத்தில் அரசு நிதியிலிருந்து ஊதியம் மற்றும் பிறபடிகள் வழங்க ரூ.6,81,52,368/- (ரூபாய் ரூபாய் ஆறு கோடியே எண்பத்தோரு இலட்சத்து ஐம்பத்திரெண்டாயிரத்து முந்நூற்றி அறுபத்து எட்டு மட்டும்) செலவினம் ஏற்படும்.

iii. ஊர்ப்புற நூலகர்கள் மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் வழங்க வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு W.P.No.8797/2001 etc,-60 10.10.2002 நாளிட்ட தீர்ப்பாணையில், பொது நூலகத் துறையில் காலியாக உள்ள மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களை நி நிரப்ப அரசு முடிவு செய்யும் போது ஊர்ப்புற நூலகர்களுக்கு பணிமூப்பின் அடிப்படையில் மூன்றாம் நிலை நூலகர்களாக நியமனம் செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு முதல் மாவட்ட நூலக ஆணைக்குழுக்களின் கீழ் செயல்படும் கிளை நூலகங்களில் மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்கள் காலி ஏற்படும் போதும் மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும்போது அரசால் உரிய விதித்தளர்வுகள் வழங்கப்பட்டு, ஊர்ப்புற நூலகர்கள் மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

iv. Level-8, ரூ.19,500 – 62,000 என்ற காலமுறை ஊதிய நிலையில் ஊதியம் பெற்று வரும் மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களுக்கு இணையான கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் கொண்ட ஊர்ப்புற நூலகர் பணியிடங்களில் Level- 4. 5.7,700-24,200 என்ற சிறப்பு காலமுறை ஊதிய நிலையில் ஊதியம் பெற்று நூலகப் பணியாற்றி வரும் ஊர்ப்புற நூலகர்களுக்கு, ஒவ்வொரு முறையும் அரசால் விதித் தளர்வுகள் வழங்கப்பட்டும் மற்றும் ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தப்பட்டும், ஊர்ப்புற நூலகர்கள் மூன்றாம் நிலை நூலகர்களாகப் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

V. 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு Level-8, ரூ.19,500 – 62,000 கொண்ட மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்கான ஊதியச் செலவினத்தை அரசுக் கணக்குத் தலைப்பில் பற்று வைத்துக் கொள்ளவும் மற்றும் மீளச் செலுத்தவும் அனுமதி.

4. பொது நூலக இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலித்த அரசு அதனை ஏற்று, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் 04.10.2023 அன்று அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், வரிசை எண்.5-ல் அறிவிக்கப்பட்ட அறிவிப்பினை பிறபடிகள் வழங்க ரூ.6,81,52,368/- (ரூபாய் ரூபாய் ஆறு கோடியே எண்பத்தோரு இலட்சத்து ஐம்பத்திரெண்டாயிரத்து முந்நூற்றி அறுபத்து எட்டு மட்டும்) செலவினம் ஏற்படும்.

iii. ஊர்ப்புற நூலகர்கள் மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் வழங்க வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு W.P.No.8797/2001 etc,-ன் 10.10.2002 நாளிட்ட தீர்ப்பாணையில், பொது நூலகத் துறையில் காலியாக உள்ள மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களை நி நிரப்ப அரசு முடிவு செய்யும் போது ஊர்ப்புற நூலகர்களுக்கு பணிமூப்பின் அடிப்படையில் மூன்றாம் நிலை நூலகர்களாக நியமனம் செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு முதல் மாவட்ட நூலக ஆணைக்குழுக்களின் கீழ் செயல்படும் கிளை நூலகங்களில் மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்கள் காலி ஏற்படும் போதும் மற்றும் ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும்போது அரசால் உரிய விதித்தளர்வுகள் வழங்கப்பட்டு, ஊர்ப்புற நூலகர்கள் மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

iv. Level-8, ரூ.19,500 – 62,000 என்ற காலமுறை ஊதிய நிலையில் ஊதியம் பெற்று வரும் மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களுக்கு இணையான கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் கொண்ட ஊர்ப்புற நூலகர் பணியிடங்களில் Level- 4. 5.7,700-24,200 என்ற சிறப்பு காலமுறை ஊதிய நிலையில் ஊதியம் பெற்று நூலகப் பணியாற்றி வரும் ஊர்ப்புற நூலகர்களுக்கு, ஒவ்வொரு முறையும் அரசால் விதித் தளர்வுகள் வழங்கப்பட்டும் மற்றும் ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தப்பட்டும், ஊர்ப்புற நூலகர்கள் மூன்றாம் நிலை நூலகர்களாகப் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

V. 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு Level-8, ரூ.19,500 – 62,000 என்ற காலமுறை ஊதிய நிலையில் ஊதியம் கொண்ட மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்கான ஊதியச் செலவினத்தை அரசுக் கணக்குத் தலைப்பில் பற்று வைத்துக் கொள்ளவும் மற்றும் மீளச் செலுத்தவும் அனுமதி.

4. பொது நூலக இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலித்த அரசு அதனை ஏற்று, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் 04.10.2023 அன்று அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், வரிசை எண்.5-ல் அறிவிக்கப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டுமாவட்ட நூலக ஆணைக்குழுக்களில் செயல்படும் ஊர்ப்புற நூலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இன்றி ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வரும், இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ளவாறு 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு தற்காலிக பணி விதிகளில் விதி 3 (பணி நியமன முறை) மற்றும் விதி 6 (இட ஒதுக்கீடு) ஆகிய விதிகளுக்கு தளர்வு செய்து மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கேதுவாக கீழ்க்கண்டவாறு அரசு ஆணையிடுகிறது.

(i) பொது நூலக இயக்ககத்தின் கீழ் உள்ள மாவட்ட நூலக ஆணைக்குழுக்களில் செயல்படும் ஊர்ப்புற நூலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இன்றி ஊர்ப்புற நூலகர்களாக Level-4. ரூ.7,700- 24,200 என்ற சிறப்பு காலமுறை ஊதிய நிலையில் பணியாற்றி வரும், மூன்றாம் நிலை நூலகர் பணியாளர்களுக்கு இணையான கல்வித் தகுதி மற்றும் பணி भបណف ार 446 झांक & Level-18. .19500-62000 என்ற காலமுறை ஊதிய விகிதம் கொண்ட மூன்றாம் நிலை நூலகர்களாக பதவியுயர்வு வழங்க அனுமதி.

(ii) மேற்காணும் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு, மூன்றாம் நிலை நூலகர்களாக பதவியுயர்வு வழங்குவதற்கேதுவாக, மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக பணிவிதிகளில் மூன்றாம் நிலை நூலகர் பணியிடத்திற்கான ஊட்டுப் பதவியான பதிவறை எழுத்தர் குறிப்பிடப்பட்டுள்ளதால், அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக பணிவிதிகளில், விதி 3 (பணிநியமன முறை) மற்றும் விதி 6 (இட ஒதுக்கீடு) ஆகிய விதிகளுக்கு தளர்வு செய்து 10 ஆண்டுகளுக்கு கு மேல் ஊர்ப்புற நூலகர்களாக பணிபுரியும் 446 பேருக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க அனுமதி.

(ii) 446 ஊர்புறநூலகங்களுக்கு Level-8, 5.19,500 – 62,000 என்ற காலமுறை விகிதம் ஊதியம் கொண்ட மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு வழங்கும் பட்சத்தில் அரசு நிதியிலிருந்து ஊதியம் மற்றும் பிறபடிகள் வழங்க ரூ.6,81,52,368/- ஐ (ரூபாய் ஆறு கோடியே எண்பத்தோரு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று அறுபத்து எட்டு மட்டும்) அரசு நிதியிலிருந்து வழங்க அனுமதி.

(iv) Level-8, 5.19,500 – 62,000 என்ற காலமுறை ஊதிய நிலையில் ஊதியம் கொண்ட மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்கான ஊதியச் செலவினத்தை அரசுக் கணக்குத்
தலைப்பில் பற்று வைத்துக் கொள்ளவும் மற்றும் மீளச் செலுத்தவும், பொது நூலக இயக்குநருக்கு அனுமதி.

5. இவ்வாணை நிதித்துறையின் அ.சா.எண். efile.7803/ பொ.நூ.1/2023, நாள். 11.01.2024 மனிதவள மேலாண்மைத்துறை நாள்22.02.2024-இல் பெற்ற இசைவுடன் வெளியிடப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...