×

கடலைக்கறி

தேவையானவை:

கருப்புக் கொண்டைக் கடலை – 1கிண்ணம்
சின்ன வெங்காயம் – 1 கிண்ணம் நறுக்கியது
தேங்காய் – 1 கிண்ணம் துருவியது
கொத்துமல்லித் தூள் – 2 தேக்கரண்டி
வற்றல் பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கடுகு – சிறிதளவு
கரம் மசாலா – 2 தேக்கரண்டி
தக்காளி – 1 கிண்ணம் நறுக்கியது
இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
உப்பு, கொத்துமல்லி இலை – தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் – 150 மிலி
மிளகாய் வற்றல் – 4

செய்முறை:

ஊறவைத்த கடலையையோடு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வதக்கி எடுக்கவும், அதோடு கொத்துமல்லி இலை, மிளகாய், கரம் மசாலா சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து தாளித்து அது பொரியத் தொடங்கியதும் தேங்காய்த் துண்டைப் போட்டு நன்கு கிளறவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் அவித்து வைத்த கொண்டைக் கடலையை அத்துடன் சேர்த்து போதுமான நீர், உப்பு சேர்த்து நன்கு கிளறி வேக விடவும். பின்னர் அரைத்து வைத்த தேங்காய் விழுதை ஊற்றி நன்கு வேக விடவும். நன்கு வெந்தவுடன் நறுக்கிய கொத்துமல்லியை தூவி இறக்கி புட்டோடு சேர்த்து பரிமாறவும்.

The post கடலைக்கறி appeared first on Dinakaran.

Tags :
× RELATED நுங்கு ஜூஸ்