×

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து மறுஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கில் ஐகோர்ட் வரும் திங்கட்கிழமை காலை தீர்ப்பளிக்க உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து மறு ஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்து விசாரித்து வந்தார். இந்த வழக்கில் பிப்ரவரி 13ம் தேதி அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பளித்தார். அப்போது; அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மார்ச் 28-க்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்த வேண்டும். மேலும் வழக்கு விசாரணையை ஜூலைக்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister I. ,ICOURT ,PERYASAMY ,Chennai ,Minister ,I. Beriyasami ,Peryasami ,Dinakaran ,
× RELATED காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து