×

எஸ்டிபிஐ மாநாடு தீவிரவாதிகள் மாநாடா? அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: போருக்கு தயாராக உள்ளதைப்போல, நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராக உள்ளது. மன்னர் படை வீரர்களை தயார் செய்வதைப் போல, அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி தயார் செய்துள்ளார். தேர்தல் தேதி எப்போது அறிவித்தாலும் களப்பணி செய்ய அதிமுக தயாராக உள்ளது. தேசிய அளவில் செயல்படும் எஸ்டிபிஐ கட்சி நடத்திய மாநாட்டை தீவிரவாதிகள் மாநாடு என அண்ணாமலை வாய்க்கொழுப்புடன் பேசி உள்ளார்.

அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவைப்படுகிறது. அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுகளால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மோடியா, எடப்பாடியா என்கிற நிலைப்பாடு எங்களிடம் இல்லை. தேர்தலில் கூட இருக்கும் வரை தான் நண்பர்கள். வெளியே போய் விட்டால் அவர்கள் எங்களுக்கு எதிரியே. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை மாற்றி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தேவையற்ற அரசியல் சாயம் பூசப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைவர் போல பேசுவதில்லை. மேடைப் பேச்சாளர் போல பேசி வருகிறார். அதிமுகவில் எம்எல்ஏவாக பதவி வகித்து, பக்கத்து வீட்டுக்காரருக்கே தெரியாதவர்களை எல்லாம் பாஜகவில் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

ஜெயலலிதா அவமதிப்பு: எடப்பாடிக்கு பாராட்டு
செல்லூர் ராஜூ கூறுகையில், ‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் உதிர்ந்த இலை, தலைமுடி போல தான். உதிர்ந்ததை பற்றி நாங்கள் என்றுமே கவலைப்பட்டதில்லை. அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். சில கட்சிகள் எல்லாம் 23ம் புலிகேசி மாதிரி பூத் கமிட்டி அமைக்கும் பணியை இப்போது தான் செய்து வருகிறது.

அதிமுகவை பொறுத்தவரை அனைத்து நிர்வாகிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் இயக்கத்தில் ஒரு பொதுச்செயலாளர் முனைப்பாக செயல்படுவது என்பது இப்போதுதான். எடப்பாடியார் எல்லோருக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். முன்பெல்லாம் அம்மா ெசால்லுவாங்க, தலைவர் சொல்லுவாங்க, ஆனால் தொடர் நடவடிக்கைக்காக மற்ற தலைவர்கள் தான் பேசுவாங்க. ஆனால், இப்போது எடப்பாடியாரே நேரடியாக பேசுகிறார். மாவட்டச் செயலாளர்களை பேச வைத்தவர் எடப்பாடி தான்’ என்றார்.

The post எஸ்டிபிஐ மாநாடு தீவிரவாதிகள் மாநாடா? அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு appeared first on Dinakaran.

Tags : STBI ,Annamalai ,AIADMK ,Minister ,Sellur Raju ,MLA ,Madurai ,Edappadi Palaniswami ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்