×

சரக்கு ரயில் தடம் புரண்டது

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக நேற்று காலை 11 மணியளவில் நான்காவது தடத்திற்கு வந்தது. அப்போது சரக்கு ரயிலின் இரண்டு இன்ஜின்களில், முன் இன்ஜினை பின் நோக்கி இயக்கிய போது எதிர்பாராத விதமாக முதல் இன்ஜினில் உள்ள மூன்று சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம்புரண்டது. இதையடுத்து அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

The post சரக்கு ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!