×

ரஞ்சி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு

கோவை: சவுராஷ்டிரா அணியுடன் நடந்த ரஞ்சி காலிறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 33 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சவுராஷ்டிரா 183 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்திரஜித் 80, பூபதி குமார் 65, சாய் கிஷோர் 60 ரன் விளாசினர்.

155 ரன் பின்தங்கிய நிலையில் நேற்று 2வது இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா 75.4 ஓவரில் 122 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. செதேஷ்வர் புஜாரா 46 ரன், கெவின் ஜிவ்ரஜனி 27, வாசவதா 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர்.தமிழ்நாடு பந்துவீச்சில் கேப்டன் சாய் கிஷோர் 4, சந்தீப் வாரியர் 3, அஜித் ராம் 2, முகமது அலி 1 விக்கெட் வீழ்த்தினர். தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 33 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. 60 ரன் மற்றும் 9 விக்கெட் (5+4) எடுத்த சாய்கிஷோர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post ரஞ்சி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ranji semi-finals ,Coimbatore ,Ranji ,Saurashtra ,Sri Ramakrishna College ,Dinakaran ,
× RELATED நிபா வைரஸ் எதிரொலி தமிழக எல்லையான...