×

பாஜவுக்கு தாவிய பிஎஸ்பி எம்பி

லக்னோ: பகுஜன் சமாஜ்(பிஎஸ்பி) எம்பியான ரித்தேஷ் பாண்டே நேற்று பாஜவில் சேர்ந்தார்.உபி மாநிலத்தை சேர்ந்த பிஎஸ்பி எம்பியான ரித்தேஷ் பாண்டே பிஎஸ்பி தலைவர் மாயாவதிக்கு நேற்று எழுதிய கடிதத்தில்,நீண்ட நாட்களாக கட்சி கூட்டங்களுக்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதே போல் கட்சி தலைமையும் என்னிடம் பேசவில்லை. உங்களை(மாயாவதி) நேரில் சந்தித்து பேச பல முயற்சி செய்தும் எந்த பயனும் அளிக்கவில்லை. அந்த சமயத்தில் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினேன்.

இதன் மூலம் கட்சிக்கு என்னுடைய சேவையோ ,பங்களிப்போ தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன். இதனால்,கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதை தவிர வேறு வழி தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.ராஜினாமா கடிதம் அனுப்பிய சில மணி நேரங்களில் ரித்தேஷ் பாண்டே திடீரென பாஜவில் சேர்ந்தார். இந்த நிகழ்வில் உபியின் பாஜ பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா,மாநில துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் உடனிருந்தனர்.

அருணாச்சலிலும் தாவல்: மக்களவை தேர்தலுடன் சேர்த்து அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த தலா 2 எம்எல்ஏக்கள் நேற்று பாஜவுக்கு தாவினர். இதனால், 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் பாஜவின் பலம் 53 ஆக உயர்ந்தது.

The post பாஜவுக்கு தாவிய பிஎஸ்பி எம்பி appeared first on Dinakaran.

Tags : BSP ,BJP ,Lucknow ,Bahujan Samaj ,Ritesh Pandey ,UP ,Mayawati ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால்...