×

வெளிநாட்டு கப்பல் ‘கைது’ ஒடிசா ஐகோர்ட் உத்தரவு

கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு கப்பல் சரக்குகளை ஏற்றிச் செல்ல கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வந்தது. அப்போது கப்பலில் ரூ.220 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்ததால் துறைமுகத்திலேயே கப்பலை நிறுத்தி விசாரணை நடக்கிறது.

இந்நிலையில், கப்பல் வாடகை கட்டணம், அபராத கட்டணம் உட்பட ரூ.7.95 கோடி செலுத்ததை எதிர்த்து பாரதீப் துறைமுகம் ஒடிசா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வெளிநாட்டு சரக்கு கப்பலை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். கடல்சார் சட்டத்தின் கீழ் கப்பலை கைது செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. இதனால் கப்பல் துறைமுகத்தில் இருந்து புறப்பட முடியாது.

The post வெளிநாட்டு கப்பல் ‘கைது’ ஒடிசா ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Odisha High Court ,Panama ,Baradeep Port ,Odisha ,
× RELATED ஜாமீன் நிபந்தனையாக அரசியலில்...