×

‘மூணாறிலிருந்து மெரினா வரை’முன்னாள் டிஜிபி தேவாரம் எழுதிய சுயசரிதை புத்தகம்: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் நாராயணன் வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வால்டர் தேவாரம். இவர் ஓய்வு பெற்ற 20 ஆண்டுகளுக்கு பிறகு, தனது பள்ளி பருவம் முதல் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்து சாதித்த சாதனைகள் குறித்து ‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற சுயசரித புத்தகம் எழுதியுள்ளார். ஆங்கிலம் மற்றும் தமிழில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மெஸ்சில் நேற்று நடந்தது.

விழாவில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் நாராயணன், தமிழ்நாடு முன்னாள் டிஜிபிக்கள் லத்திகா சரண், சைலேந்திரபாபு, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் டிஜிபி ஜெயந்த் முரளி, தமிழ்நாடு தலைமையிட கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் வால்டர் தேவாரத்தின் மகள் அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புத்தகத்தின் முதல் பிரதியை ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் நாராயணன் வெளியிட்டார். விழாவில் வால்டர் தேவாரம் பேசுகையில், சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டை மற்றும் வீரப்பனை சுட்டு கொன்றது குறித்தும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியது, முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா ஆகியோரிடம் பணியாற்றியது குறித்தும் புத்தகத்தில் எழுதி இருப்பதாக தெரிவித்தார். சுய சரிதை எழுத மனைவி, மகள் பெரிய அளவில் உதவியதாகவும் கூறினார்.

The post ‘மூணாறிலிருந்து மெரினா வரை’முன்னாள் டிஜிபி தேவாரம் எழுதிய சுயசரிதை புத்தகம்: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் நாராயணன் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : DGP ,Devaram ,RBI ,Governor Narayanan ,CHENNAI ,Walter Devaram ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...