×

அண்ணா-கலைஞர் ஓய்வுகொள்ளும் இடங்கள் இன்று நடக்கும் திறப்பு விழாவுக்கு அனைவரும் வர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாடு பெற்ற பயன்களை வரும் தலைமுறைகள் அறிந்துகொள்ளும் வகையில் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் ஓய்வு கொள்ளும் இடங்கள் திறப்பு விழாவிற்கு உடன்பிறப்புகள் அனைவரும் வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.  இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: ப்ரவரி 26ம் தேதி (இன்று) நடைபெறவுள்ள அண்ணா-கலைஞர் நினைவிட திறப்புவிழாவுக்கு உங்களை வரவேற்கக் கடமைப்பட்டுள்ளேன்.

தையும் தாங்கும் இதயத்துடன் அண்ணா துயில் கொள்ளும் சதுக்கமும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரு பெரும் தலைவர்களால் நம் இனிய தமிழ்நாடு பெற்ற பயன்களை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறியும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வரலாற்றுச் சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளன அண்ணா கலைஞர் ஓய்வு இடங்கள். த்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிலவறையில் பயணித்தால், கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

அவர் பெற்றுத் தந்த செம்மொழித் தகுதி, அவர் உருவாக்கிய கணினிப் புரட்சி, அவர் கட்டமைத்த நவீனத் தமிழ்நாடு, அவருடைய படைப்பாற்றல், அவரது நிர்வாகத்திறன், இந்தியத் தலைவர்களின் பாராட்டுதலைப் பெற்ற கலைஞரின் ஆளுமை உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ந்தப் பணியை நிறைவேற்ற அல்லும் பகலும் உழைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அர்ப்பணிப்புமிக்க உழைப்பையும், அவருக்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையினரின் ஒத்துழைப்பையும் மறக்க முடியாது.

என்றென்றும் நெஞ்சில் வாழ்ந்து, நம்மை இயக்கக்கூடிய தலைவரின் ஓய்விடம் வியக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, பிப்ரவரி 26ம் நாள் (இன்று) திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் திறந்து வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு ஒளி தந்த ஞாயிறான நம் கலைஞரின் ஓய்விடம், திங்கள் மாலையில் திறந்து வைக்கப்படும் நிகழ்வில், அவரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என உங்களில் ஒருவனான நான் உரிமையுடனும் உள்ளன்புடனும் அழைக்கின்றேன்.

தலைமுறைகள் கடந்த தலைவரான நம் கலைஞர், தமிழ் அலைகளின் தாலாட்டில், தன் அண்ணனின் தலைமாட்டில் ஓய்வெடுக்கிறார். அவரைக் காண வங்கக் கடலோரம் வருக உடன்பிறப்பே. வ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அண்ணா-கலைஞர் ஓய்வுகொள்ளும் இடங்கள் இன்று நடக்கும் திறப்பு விழாவுக்கு அனைவரும் வர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Anna-Kalainagar ,Tamil Nadu ,Anna ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...