×

பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 வரை அவகாசம்

சென்னை: பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ ஆகிய படிப்புகளுக்கு ஏஐசிடிஇ-ன் அனுமதி பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மார்ச் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம்(ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக் குறிப்பு: 024-25ம் கல்வியாண்டுக்கான பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ அனுமதி பெறும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏஐசிடிஇயின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களை பெற முடியும்.

இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. மேலும், உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாடு முழுவதும் 100 உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (பிப்ரவரி 26) நிறைவு பெறுகிறது. தற்போது கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கல்லூரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.aicte.india.org என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கண்ட வலைத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். அதேநேரம் ஒன்றிய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் இந்த அனுமதியை பெற தேவையில்லை. எனினும், ஏஐசிடிஇயின் திட்டங்களை பெற விரும்பினால் மட்டும் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.

The post பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 வரை அவகாசம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,AICTE ,All India Council for Technical Education ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...