×

சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை: விருதுநகர் மாவட்டம் சிந்தப்பள்ளி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சிந்தப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (24-02-2024) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அருணாச்சலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 21) த/பெ. அழகுமாரிச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Sindapalli ,Chathur ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister MLA ,Sinthapalli village, Virudhunagar district ,Virudhunagar district, Chathur district, ,Sindapalli village ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...