×

திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் மற்றும் நகரம், பெலாகுப்பம் ரோடு, பாரதிதாசன் பேட்டையைச் சேர்ந்த செல்வன்.

தேவேந்திரன் (வயது 9) த/பெ. மாரி என்பவர் கடந்த 23.02.2024 அன்று மாலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக மின்மோட்டாரைப் பயன்படுத்தும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்து, உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Dindivanam ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister MLA ,Viluppuram district ,Dindivanam Circle ,City, Belagupam Road ,Dinakaran ,
× RELATED பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்