×

நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

துவாரகா: குஜராத் மாநிலம் ஓகா நிலப்பரப்பையும், துவாரகா தீவையும் இணைக்கும் 2.32 கிமீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான சுதர்சன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். முன்னதாக ‘சிக்னேச்சர் பாலம்’ என்று அழைக்கப்பட்ட இந்தப் பாலம், தற்போது ‘சுதர்சன் சேது’ அல்லது சுதர்சன் பாலம் எனப் பெயர் மாற்றப்பட்டது. சுதர்சன் சேது பால திறப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிடோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து மோடி வெளியிட்ட பதிவில், ‘நிலங்களையும் மக்களையும் இணைக்கும் சுதர்சன் சேது பாலத்தை இன்று திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டின் சான்றாக இது நிற்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

The post நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Dwarka ,Sudarshan Setu Cable Bridge ,Oga ,Gujarat ,Dwarka Island ,Signature Bridge ,Dinakaran ,
× RELATED தெய்வம் ஒருபோதும் அருள்புரியத் தவறாது!