×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் சென்னை கிழக்கு மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் பார்வையிட்டார்

பெரம்பூர்: தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனை சாலை விநாயகர் கோயில் தெரு பகுதியில், ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள்’’ என்ற பெயரில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில், துறைமுக கிழக்கு பகுதி 56வது வட்டத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் இன்று காலை நடைபெற்றது. வட்ட செயலாளர் பரத்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில், அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மருத்துவர் அணி செயலாளர் எழிலன் எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கிவைத்தனர்.

எழும்பூர் வடக்கு பகுதி 77வது வட்டத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு குடியிருப்பு பகுதியில் வட்டசெயலாளர் தயாளன் ஏற்பாட்டில், மருத்துவ முகாம் நடைபெற்றது. 71 வது வட்டத்தில் வட்ட செயலாளர் ருத்ரமூர்த்தி ஏற்பாட்டில் ஜமாலியா ஹைதர் கார்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. கொளத்தூர் ஜவகர் நகர் 70 அடி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் வட்ட செயலாளர் பி.டி.சி. ரவி ஏற்பாட்டில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அயனாவரம் என்எம்கே. தெருவில் உள்ள தனியார்திருமண மண்டபத்திலும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இந்த அனைத்து மருத்துவ முகாம்களிலும் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அத்துடன் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், சென்னை மாநகராட்சி பொது சுகாதாரம் நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி, திருவிக. நகர் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் சென்னை கிழக்கு மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Tags : Principal ,M.U. K. Stalin ,Eastern District of Chennai ,Perampur ,Tamil ,Nadu ,Chennai Barimuna Road Vinayagar Temple Street ,Dimuka Medical Team ,Eastern District ,of ,Chennai, Port East District 56 ,
× RELATED மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே...