×

சென்னையில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் உள்பட 4 பேர் கைது

சென்னை: சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் தினேஷ் உள்பட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கொலை, SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த பிரவீன் ஜல்லடையாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்க்ளின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மாதங்களுக்கு முன் பிரவீன் – ஷர்மி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இருவரின் திருமணத்தை அடுத்து பிரவீன் மீது ஷர்மியின் உறவினர்கள் கோபத்தில் இருந்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு பள்ளிக்கரணை அருகே பிரவீனை ஷர்மியின் அண்ணன் உட்பட 3 பேர் பிரவீனிடம் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனை வெட்டியுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பிரவீனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆணவக் கொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் தினேஷ் உள்பட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கொலை, SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post சென்னையில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Arnavak murder incident ,Chennai ,Dinesh ,Chennai school district ,Praveen Jalladiampettai ,Arnavak ,
× RELATED நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட...