×

மகளிர் பிரீமியர் லீக்: யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி

பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் கடந்த 23ம் தேதி தொடங்கியது. பெங்களூரு, மும்பை, உ.பி., டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 5 அணிகள் நடப்பு சீசனில் விளையாடுகின்றன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியின் கடைசி பந்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நேற்று பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி – யுபி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் யுபி வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பெங்களூரு அணி களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோஃபி டிவைன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து களமிறங்கிய சப்பினேனி மேகனா 44 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ் 37 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. தீப்தி ஷர்மா மற்றும் ஷோஃபி எக்லெஸ்டோன் இருவரும் களத்தில் இருந்தனர்.

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், பெங்களூரு 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யுபி வாரியர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்களில் தோல்வி அடைந்துள்ளது.

The post மகளிர் பிரீமியர் லீக்: யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Women's Premier League ,Bangalore ,UB Warriors ,Mumbai ,U. ,BP ,Delhi ,Gujarat ,Mumbai Indians ,Dinakaran ,
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...