×

திருக்காட்டுப்பள்ளி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு போலீஸ் வலை

திருக்காட்டுப்பள்ளி: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூதலூர் பெரியார்புரத்தை சேர்ந்தவர் நேரு. இவரது வீட்டில் அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டையை சேர்ந்த சிவா மனைவி சங்கீதா (25) என்பவர் குடியிருந்து வருகிறார். வீட்டின் உரிமையாளர் நேருவுக்கும் திருச்சி ராதாகாலனி மாரிஸ் அவென்யூ ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் இட பிரச்னை சம்பந்தமாக முன் விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் நேருவின் வீட்டில் குடியிருந்த சங்கீதா வீட்டிற்கு வந்து யார் வீட்டில் யார் குடியிருக்கிறீர்கள் என்று கூறி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, ஜன்னல் கதவுகளை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து சங்கீதா பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் உதவி ஆய்வாளர் தரன் வழக்கு பதிந்து ராதாகிருஷ்ணனை தேடி வருகிறார்.

The post திருக்காட்டுப்பள்ளி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Thirukkatupally ,Thirukkattupalli ,Boothalur Periyarpuram ,Tirukkatupalli ,Siva ,Sangeetha ,Varadarajan Pettai, Ariyalur district ,
× RELATED திருக்காட்டுப்பள்ளியில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி