×

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்

வேதாரண்யம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கடந்த 1ம்தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் 2018-ல் அளித்த தீர்ப்பின்படி அமைத்துள்ள, காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகம் – தமிழ்நாடு – கேரளம் – புதுவை ஆகிய நான்கு மாநிலங்களுக்குக் காவிரி நீரைப் பகிர்ந்தளிப்பதற்கான அதிகாரம் மட்டுமே கொண்டது.

The post மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Meghadatu Dam ,Vedaranyam ,Tamil Nadu Farmers Protection Association ,Tanjore Regional Coordinator ,Parthasarathy ,Cauvery Management Commission ,Cauvery River ,Tamil Nadu ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்