×

தேவதானப்பட்டி ஜி.கல்லுப்பட்டியில் பள்ளி மைதானத்தை சீரமைக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை

 

தேவதானப்பட்டி, பிப். 25: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சரிவர கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேவதானப்பட்டி ஜி.கல்லுப்பட்டியில் பள்ளி மைதானத்தை சீரமைக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,G. Kallupatti ,school ,G. Kallupatti Government School ,Government Higher Secondary School ,Dinakaran ,
× RELATED தேவதானப்பட்டி பகுதியில் தென்னை...